தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனை நிறைவேற்ற வேண்டும் என்று  இன்று(ஜூன் 14) முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.