இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.

4 நாட்கள் பொங்கல் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படுகின்றன. கடந்த மாதமே இதற்கான முன்பதிவு தொடங்கி விட்ட நிலையில்,  இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, கே.கே.நகர், மாதாவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து தெரிந்து கொள்வதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.