சென்னையில் சமீபகாலமாக ரயில்களிலும் பேருந்துகளிலும் மாணவர்கள் அடிக்கும் அட்ராசிட்டி அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 4-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர் என்பவர் தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த தாக்குதல் விவகாரத்தில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர் உயிரிழந்ததால் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டதோடு ரயில்களிலும் பேருந்து நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரூட்டு தல விவகாரத்தால் மாணவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுவதோடு ரயில்களிலும் பேருந்துகளிலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக நடந்து கொள்கிறார்கள். மேலும் இதன் காரணமாக இனி ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என ரயில்வே காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.