தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்…. கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், முதலாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி நடத்தப்பட்டது. அவர்களுக்கான பாடத்திட்டத்தை மே 1ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் இது ஆசிரியர்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் தேவைப்பட்டால் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்திக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.