நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் இன்று (ஜனவரி 4ஆம் தேதி) ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார. இந்த விடுமுறையை ஈடு செய்வதலதற்காக ஜனவரி 21ஆம் தேதி வேலைவாய்ப்பு நாளாக அறிவித்துள்ளார்.