இந்து மக்களால் சிவனுக்கு விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகை மகாசிவராத்திரி. இந்த பண்டிகையானது இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதை ஈடு செய்யும் விதமாக மார்ச் 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் மார்ச் 8 ஆம் தேதியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.