தமிழகத்தில் இதுவரை…. 65% வாக்குகள் பதிவானது – தேர்தல் ஆணையர் தகவல்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகி வருகின்றது.  நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடைய இருக்கிறது. மேலும் வாக்குப்பதிவு பொதுவாக அமைதியாக நடைபெற்றதாகவும், இதுவரை 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *