தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தினம்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு விரைவில் தடை சட்டம் கொண்டுவர வேண்டுமென பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிலையில் ஆன்லைன் டிரம்மியில் பணத்தை இழந்த சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாளராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் என்ற 26 வயது இளைஞர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதனால் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் மன அழுத்தம் காரணமாக நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேரி கொண்டே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.