தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நேற்று முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து வகையான சுயநதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும். அடுத்த பருவத்துக்கான பாட வகுப்புகளும் இன்றே தொடங்கப்படும் என்றும் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வி கமிஷனர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் வரும் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.