தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி தேர்வு 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை 42 வயது கடந்தவர்கள் இனி எழுத முடியாது என்ற புதிய நடைமுறையானது 2023 முதல்அமலுக்கு வந்துள்ளது.

கொரொனா காலத்தில் பலர் பாதிக்கப்பட்டதால் 40ஆக இருந்த உ உச்ச வயது 45ஆக உயர்த்தப்பட்டது. தற்போது நிலை சீரடைந்துள்ளதால் உச்சவயது 42ஆக குறைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு பிரிவினர் 5 வருடங்கள் கூடுதலாக, அதாவது 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.