தமிழகத்தில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஜாதி ரீதியான பதவி உயர்வால் பணி மூப்பு இருந்தும் உரிய தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் தற்போதும் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி உயர்வு பெறாத அரசு ஊழியர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் ஜாதி ரீதியான பதவி உயர்வு வழங்குவதே சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தின் விதிகளின்படி மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவியில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்ற ஐந்து லட்சம் ஊழியர்கள் பதவி இறங்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.