தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000….. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு செப்டம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதில் தகுதியுள்ள மகளிருக்கு கட்டாயம் உரிமைத் தொகை சென்றடையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை அறிவிப்புக்கு முதலமைச்சருக்கு நன்றி. உரிமை தொகையை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நீடித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.