ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி,   கருவிழி மூலமாக ரேஷன் பொருட்களை பெரும் திட்டம் தற்போதைக்கு ஒரு சில ரேஷன் கடைகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இரண்டு மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் வாயிலாகவும் பொதுமக்கள் கருவிழி மூலமாகவே பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.