தமிழகத்தில் அனைத்து நாளும் செல்லலாம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி?… இதோ!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது..

தமிழகத்தில் கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

இந்த நிலையில் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், இன்று முதல் அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம். மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதே போன்று அனைத்து தனிப் பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும் பின்வரும் செயல்பாடுகளுக்கு வருகின்ற 1ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி.

மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் செயல்படவும் அனுமதியளிக்கப்படுகிறது. காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சி களுக்கும் அனுமதி.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் பங்கேற்கலாம்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.

அரசியல் கூட்டங்கள் திருவிழாக்கள் சமுதாய கலாசார நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும்.

தமிழக அரசின் அறிக்கை : 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *