கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே இன்று நடந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் மீது வழியாக வந்த அரசு பேருந்து மோதியது.

இந்த விபத்தில் சரத்குமார், ஹரிஷ், நகன் ஆகிய மூவர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.