தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.