தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் எப்படி இருக்கும் தெரியுமா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 3 நாட்களாக கன மழை ஓயாமல் பெய்து வருகிறது. அதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கன மழை எப்போது நிற்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு ஆன வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.