தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாலை 4 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.