தமிழகத்திற்கு 7.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…. மத்திய அரசு ஒதுக்கீடு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகத்திற்கு 7.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 5.39 லட்சம் கோவிஷில்டு, 1.94 லட்சம் கோவக்சின் தடுப்பூசிகள் 2 வாரத்தில் தமிழகத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *