தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்திய பிரதா சாஹூ இருந்தார். இவரை தற்போது அரசு பணியிட மாற்றம் செய்து கால்நடை துறை செயலாளராக நியமித்துள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல்முறையாக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும் அர்ச்சனா பட் நாயக் ஒடிசா மாநிலத்தை  சேர்ந்தவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.