தமிழகத்தின் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?…. சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால் எத்தனை நாள் விடுமுறை விடப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.தீபாவளிக்கு முன்பு இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறை அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை.அடுத்து திங்கட்கிழமை தீபாவளி என்பதால் அரசு பொது விடுமுறை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.

இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பும் வகையில் கூடுதலாக ஒரு நாள் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து உள்ள நிலையில் தமிழக அரசு இது குறித்து ஆலோசனை நடத்தி விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாட்களும் தீபாவளி முடிந்த பிறகும் சொந்த ஊருக்கு சென்றவர்கள் அனைவரும் திரும்ப ஏதுவாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் தொடர் விடுமுறைகள் வழங்கப்படும் எனவும் அதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *