இணையதளத்தில் தற்போது வெளியாகும் வீடியோக்கள் எங்கு அநியாயம் நடந்தாலும் காட்டி கொடுத்து விடுகிறது. அதாவது தற்போது பலரது கைகளும் செல்போன் இருப்பதால் எங்கு ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தாலும் உடனடியாக வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள். அந்த வகையில் ஓடும் ரயிலில் ஒரு பயணியை  ரயில்வே ஊழியர் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது ரயில்வே ஊழியர் ஒருவர் அந்த பயணியை கொடூரமாக பெல்டால் அடித்து தாக்கும் நிலையில் அவர் வெளியே தப்பி போடக்கூடாது என்பதற்காக டிக்கெட் பரிசோதகர் அங்கு சேர் போட்டு அமர்ந்துள்ளார். இந்த சம்பவம் ஆம்பராலி ரயிலில் அமிர்தசரஸ் மற்றும் கதிகார் ஆகிய பகுதிகளுக்கு இடையே நடந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.