தப்பு கணக்கு போட்ட ஓபிஎஸ்: அடுத்து நடக்கப்போவது என்ன ?

புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலமைச்சராக இருந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற நிர்வாக திறனும், எடுத்த முடிவினை செயல்படுத்தி காட்டிய உறுதியும் புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவிக்கு பின் அதிமுகவை வழிநடத்தக்கூடிய வலிமையான தலைமையாக எடப்பாடி பழனிசாமியை தொண்டர்களிடையே அடையாளம் காட்டியது.

அதன் எதிரொலியே இன்று அதிமுகவின் ஒற்றை தலைமையாகவும், பொதுச்செயலாளராகவும்,  ஒன்றரை கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை முழங்கும்படி செய்துள்ளது. ஆனால் நில ரீதியாக தென் மாவட்டங்களில் தனக்கு மட்டுமே அதிமுகவில் செல்வாக்கு இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறி வருவது உண்மையா?  மாய பிம்பமா? தென் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருவது கண்கூடாக தெரியும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் போடுவது தப்பு கனக்கா?

தன்னை நம்பி வந்தவர்களை கண்டு கொள்ளாதவர் பன்னீர்செல்வம் என்று தென் மாவட்டத்தினர் கூறும் புகார்களின் உண்மை தன்மை என்ன? ஒன்றரை கோடி தொண்டர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்ட ஒற்றை தலைமைக்கு முரண்பட்டு நிற்பதற்கு ஓ.பன்னீர் செல்வத்தின் சுயநலம் தான் காரணமா.? சாதி – மத – இனம் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அதிமுகவை ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் கட்சியாக ஓ.பன்னீர்செல்வம் அடையாளப்படுத்துவது முறையா..? தீய சக்தி என்று புரட்சித்தலைவராலும்,  புரட்சித்தலைவியாலும் சுட்டிக்காட்டப்பட்ட கருணாநிதியை பாராட்டி ஓ.பன்னீர்செல்வமும், திமுக ஆட்சியைப் புகழ்ந்து அவரது மகனும் பேசியுள்ளதை தொண்டர்கள் எப்படி பார்க்கிறார்கள் ?

யாரை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கினாரோ, அவர்களிடமே அதிமுகவை ஒப்படைக்கும் நோக்கத்துடன் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக உடன் பயணித்தவர்களே எழுப்பும் புகாரின் உண்மை என்ன..? இப்படி பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அதிமுகவில் அடுத்து  நடக்கப்போவது என்ன என்பது குறித்தும், தமிழக அரசியல் நகர்வு கடந்த 2வாரமாக சென்றுகொண்டு இருக்கும் நிலையில் நேற்று இரவு ஓ.பி.எஸ் எடப்பாபடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *