செல்போன் கடையில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரீத்தாபுரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்ற ரவி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த செல்போன்கள் அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்களால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.