மயக்க ஊசி செலுத்தப்பட்ட போதிலும் தப்பி ஓடிய புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரா, மசினக்குடி போன்ற வனப்பகுதியில் புலி 30-க்கும் மேற்பட்ட மாடுகளை அடித்துக் கொன்றுவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வனத்துறையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வனப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வனத்துறையினர் மசனகுடி வனப் பகுதியில் சுற்றித்திரிந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனாலும் அங்கிருந்து புலி தப்பித்து விட்டது. இருப்பினும் மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலி சோர்வாக காணப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.