தபால் வாக்கு விவகாரத்தில் திடீர் திருப்பம்…. சிபிஐ விசாரிக்க பரிந்துரை..!!

போலீசாருக்கு லஞ்சம் வழங்கியதாக திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட சில காவல் நிலையங்களில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆணையர் நடத்திய திடீர் சோதனையில், காவல் துறையினர் சிலரிடம் இருந்து பணம் வைக்கப்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருக்கு ஆதரவாக தபால் வாக்களிப்பதற்காக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மூலம் காவல் துறையினருக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் திமுக வழக்கறிஞர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் உட்பட துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசாருக்கு லஞ்சம் வழங்கியதாக திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

திமுகவின் மீதான புகார் நிருபீக்கப்பட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் அல்லது திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால், திருச்சியில் மிகுந்த பரப்பு ஏற்பட்டுள்ளது.