நாடாளுமன்றத்தில் கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது ராகுல்காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். அப்போது அனுராக் தாக்கூர் “தன் சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து கூறுகிறார்கள்” என்றார். இதைக் கேட்டவுடன் அனுராக் தாக்கூருக்கு அவையில் இருந்த எம்பிக்கள் பலரும் கட்டணம் தெரிவித்தனர்.
அப்போது ராகுல் காந்தி அவர் என்னை அவமானப்படுத்தினாலும் நிச்சயம் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நடக்கும் என்று தெரிவித்தார். அந்த சமயத்தில் அனுராக் தாக்கூருக்கும், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அனுராக் தாக்கூர் நான் ராணுவத்தில் கேப்டனாக வேலை பார்த்து இருக்கிறேன். எனவே எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல தேவையில்லை என்றார். மேலும் ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசியதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு கொடுத்து இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.