தமிழ் திரைப்பட துணை நடிகராக வலம் வந்தவர் பிரபு. இவர் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் படிக்காதவன் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான படங்களில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார்.  இதனிடையே பிரபு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

ஆதரவற்ற சூழலில் இருந்து வந்த அவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து வந்தார். இந்த நிலையில் துணை நடிகர் பிரபு இன்று உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.