தனுஷ் படத்தின் டீசர் ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. வெளியான புது அப்டேட்….!!!!!

இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். அத்துடன் இந்துஜா ரவிச் சந்திரன், யோகிபாபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் நானே வருவேன் படத்தின் டீசர் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகயிருக்கிறது. இதை கலைப் புலி எஸ்.தாணு தன் சமூகவலைதளத்தில், “எண்ணியதுஎண்ணியபடி, சொன்னதுசொல்லிய படி நானே வருவேன் செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த டீசர் வருகிற 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.