திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நிரந்தர பணியாளர்களை தனியார் மயமாக்கும் தமிழக அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர் சங்க நிர்வாகி முருகேசன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார்.
மேலும் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.