தனியார் பேருந்து-கார் மோதல்…. 2 பேர் பலி; 2 பெண்கள் படுகாயம்…. கோர விபத்து…!!!

காரும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான விஜயலட்சுமி, மாலதி, சுப்புலட்சுமி ஆகியோருடன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். அதே சமயம் ஒரு தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தம்பட்டி அருகே சென்ற போது காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மகேந்திரன் உட்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலதியும், மகேந்திரனும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.