தனியார் பள்ளிகள் இதை செய்தால்…. கடும் நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருவதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப் படுவதாக புகார் வருவதால் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் 12 வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *