தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி நடப்பாண்டில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். மே 20 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.