தனியார் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு வரி… உச்ச வரம்பு ₹25 லட்சமாக உயர்வு..!!!

தனியார் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு வரி உச்சவரம்பு 25 லட்சமாக உயர்ந்துள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் ஈட்டிய விடுப்புக்காக பெறும் தொகை மூன்று லட்சம் மேல இருந்தால் வருமான வரி விதிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் இந்த வரம்பு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது இதற்கான ஆணையை இந்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த வரிசலுகை வருகின்ற ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.