தனியாக இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி….. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலித் தொழிலாளி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வழக்கான பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 15 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் நரசிம்மன் அந்த சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் நரசிம்மனை தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது நரசிம்மன், அவரது தாய் லட்சுமி, தந்தை சின்னச்சாமி, மனைவி அனிதா, உறவினர்கள் போன்றோர் சிறுமியின் தாயை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த சிறுமியின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரசிம்மன் உட்பட 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *