தனிமையில் இருக்கும் வீடியோ…. மனைவியை மிரட்டிய இன்ஜினியர்…. போலீஸ் நடவடிக்கை…!!

உல்லாசமாக இருந்ததை இணையதளத்தில் வெளியிடுவேன் என மனைவிக்கு மிரட்டல் விடுத்த இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2018-ஆம் ஆண்டு கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் இன்ஜினியரான சுரேஷ் என்பவருடன் தனக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள் நானும், எனது கணவரும் கத்தார் நாட்டிற்கு சென்றோம். அங்கு பெற்றோருடன் செல்போனில் பேசக்கூடாது எனவும், அப்படி பேசினால் ஸ்பீக்கரை போட்டு தான் பேச வேண்டும் எனவும் ரமேஷ் வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து ரமேஷ் எப்போதும் செல்போனில் சாட்டிங் செய்து கொண்டு இருப்பார். அதனை கேட்டால் தினமும் என்னை அடித்து துன்புறுத்துவார். மேலும் எனது சம்பள பணம் 10 லட்ச ரூபாய் வரை சுரேஷிடம் கொடுத்துள்ளேன். கடந்த செப்டம்பர் மாதம் நானும் சுரேஷும் கோவில்பட்டிக்கு வந்துள்ளோம். இதனைத்தொடர்ந்து சுரேஷின் செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவும், புகைப்படமும் இருந்தது. இது குறித்து கேட்டபோது சுரேஷ் என்னை அடித்து துன்புறுத்தினார்.

இதனை தொடர்ந்து உன்னுடன் நான் தனிமையில் இருக்கும் வீடியோ எனது செல்போனில் இருக்கிறது எனவும், அதனை இணையதளத்தில் வெளியிடுவேன் எனவும் சுரேஷ் என்னை மிரட்டினார். எனவே எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் என்ஜினீயரான சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *