தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யா…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூரியா கடந்த 2002-2003 முதல் 2006-2007 வரையான நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரி துறை வழக்கு பதிவு செய்யள்ளது. இதனையடுத்து தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.