10 கி.மீ நடந்து சென்று…. தந்தையின் மீதுபுகார்” 11 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு…!!!

ஒடிசாவில் மதிய உணவிற்காக அரசு வழங்கிய பணத்தை பறித்துக் கொண்ட தந்தையின் மீது புகார் கொடுக்க 10 கிலோமீட்டர் நடந்து சென்ற சிறுமியால் பரபரப்பு .

ஒடிசாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கு அரிசி மற்றும் பணத்தை மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வங்கி கணக்கில் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கேந்திரா பாரா மாவட்டத்தில் உள்ள டுகுகா கிராமத்தில் ஆறாம் வகுப்பு மாணவி சங்கீதா சேத்தி வசித்து வருகிறார். அவரின் மதிய உணவிற்காக அரசின் சார்பாக வழங்கப்பட்ட அரிசி மற்றும் பணத்தை தனது தந்தை வழங்க மறுத்துள்ளார்.

அதனால் அந்த 11 வயது சிறுமி அவற்றை மீட்டு தரவேண்டும் என்று பத்து கிலோ மீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் வர்மாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அந்த சிறுமியின் தாயார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததால், தந்தை மறு திருமணம் செய்து கொண்டு சிறுமியை கவனிக்க மறுத்ததால் அவர் தற்போது தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *