கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலபழங்கூர் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்துவிட்டார். இதனால் 8-வது நாள் துக்க நிகழ்ச்சிக்காக செந்தில் ராஜா குடும்பத்துடன் காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நூரோலை கிராமம் வழியாக சென்றபோது திடீரென கார் முன்பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் செந்தில் ராஜா நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் அவசர அவசரமாக கீழே இறங்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து வந்து காரின் மீது ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.