தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை வாரிசை வரவேற்றுள்ளனர். நடிகர் ராம்சரண் மற்றும் உபசானா தம்பதியர் பெற்றோர் ஆனார்கள். ஜூப்ளி ஹில்ஸ் சப்பல்லோ மருத்துவமனையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உபசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் தற்போது நலமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மெகா வாரிசு வந்து விட்டதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராம்சரண் தற்போது சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.