தண்ணீரை வீணாக்காமல் மிச்சப்படுத்தி மகிழ்ச்சி காண்போம்..!!

தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் ரொம்ப அவசியம். அதனால் வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.

மார்ச் 22 அன்று சர்வதேச நீர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாம் ஒரு முக்கியமான உறுதிமொழியை எடுக்க வேண்டும்.

இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது. இன்னும் வரும் காலங்களில் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீரை சேமிக்க வேண்டும். நம்முடைய பழமொழியில் கூட முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

“நீரின்று அமையாது உலகு, சிறுதுளி பெருவெள்ளம்” அதற்கு ஏற்ப சின்னச்சின்ன ஒவ்வொரு துளிகள்  கூட நாம் சேமித்தால் நாளைக்கு அது பெரிய அளவில் நமக்கு தண்ணீர் சேமிப்பாக கிடைக்கும். நீரின்றி ஒரு உயிர் கூட வாழ முடியாது. நாம் சாப்பிடும் காய்கறிகளாக இருக்கட்டும்.   அரிசி எல்லாவற்றுக்கும் நீர் அவசியம். “நாம் நீரை சேமிப்போம், வளம் காப்போம்”

முடிந்த அளவிற்கு நாம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணடிக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக நாம் அனைவரின் வீட்டிலும் ஆறுமோ சிஸ்டம் என்கின்ற வாட்டர் பியூரிபையர் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அது ஒரு லிட்டர் தண்ணீர் உருவாக்குவதற்கு, 3 லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது. இந்த வீணாகும் தண்ணீரை நாம் ஒரு வாளியில் சேமித்து வைத்துக் கொண்டு, இந்த நீரை நாம் செடிகளுக்கு அல்லது தெருக்களுக்கு அல்லது முற்றங்களையும்  தூய்மைப் படுத்திக்கொள்ள உபயோக படுத்திக்கொண்டாள் நல்லதாக இருக்கும். இதன் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட அளவில் நீர் வீணாவதை தடுக்க இயலும்.