அரியலூர் அருகே பிறந்த 45 நாட்களில் ஆன ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணத்தில் பாலமுருகன் சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சங்கீதா அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சங்கீதா இன்று காலை எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்து இருந்த குழந்தை காணாமல் போனதை கண்ட அதிர்ச்சியடைந்தார். குழந்தையை தேடிய போது வீட்டின் பின்புறம் இருக்கும் தண்ணீர் பேரலில் குழந்தை போர்வையுடன் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசுவின் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தாயுடன் படுத்திருந்த குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டவர்கள் யார்? இந்த கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.