தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் பாதுகாப்பாக இல்லை…. ஆனால் தடுப்பூசி மட்டுமே தீர்வு…. எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்….!!

கொரோனாவை தடுக்க  தடுப்பூசிகள் மட்டுமே தீர்வாகும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பிரேசிலும்  அதிக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் 50 அமைப்புகள் சேர்ந்த ஒரு குழு ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனாவிலுருந்து உலகம் முழுமையாக விடுபட தடுப்பூசி செலுத்துவதே தீர்வு என்றும் ஆனால் 2024 வரை வளரும் நாடுகள் மக்களுக்கு தகுந்த தடுப்பூசியை அளிக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிது புதிதாக கொரோனா உருமற்றம் அடைவதால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நாட்டவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகள் தளர்வுகளை அறிவிப்பது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். மேலும் உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்வரை அனைவரும் பாதுகாப்பு அற்ற நிலையில் தான் இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *