தடுப்பூசி போட்டால் கொரோனா ? வெளியான சூப்பர் தகவல்…. ஆய்வில் செமையான முடிவு …!!

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கோவிஷியில்டு மற்றும் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்ட பின்னரும் பலருக்கு கிருமி தொற்று ஏற்படுவதாக பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு அது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி கோவக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 93 லட்சம் பேரில் 4208பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவக்சின் இரண்டாவது டோஸ் செலுத்திய பதினேழு லட்சத்து முப்பத்து ஏழாயிரம் பேரில் 695பேரை கொரோனா தாக்கியுள்ளது.

இரண்டு பரிசோதனைகளிலுமே பத்தாயிரத்தில் நான்கு பேருக்கு என்ற விகிதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போன்று கோவிட்ஷில்ட் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பத்து கோடி பேரில் 17ஆயிரம் பேருக்கும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு ஒன்றரை கோடி பேரில் 5000 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பத்தாயிரம் பேரில் அதிகபட்சமாக நான்கு பேர் என்ற விகிதத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனிடையே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசி இங்கிலாந்து, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் உருமாறியகொரோனா வைரசுக்கு எதிராகவும் நல்ல பலன் தருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கோவக்சின் ஒட்டு மொத்தமாக 78 சதவீதம் பலன் அளிப்பதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *