தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் தொடக்கம்.. ஈஸ்டர் பண்டிகையில் பிரதமர் அறிவிப்பு..!!

பிரிட்டனில் வருகின்ற மே மாதத்திலிருந்து தடுப்பூசிக்குரிய பாஸ்போர்ட் திட்டம் துவங்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு பாஸ்போர்ட் திட்டம் தொடர்பான விதிமுறைகள் என்ன? என்பதை ஈஸ்டர் பண்டிகையான திங்கட்கிழமை அன்று பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முதல் நிலையாக பிரிட்டன் முழுவதும் இருக்கும் உணவகங்கள், திரையரங்குகள், பப்கள் மற்றும் அரங்கங்கள் போன்றவற்றில் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உபயோகபடுத்தி பைலட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற பகுதிகளுக்குள் ஒருவர் அனுமத்திக்கப்பட வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அதாவது தடுப்பூசி பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பரிசோதனையை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வரும் ஜூன் மாதத்தில் 21ஆம் தேதியன்று ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி பாஸ்போர்ட்டின் பரிசோதனையை பொருத்தே மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.