“தடுப்பூசி பணிகளுக்கு “யு-வின்” இணையதளம்…. மத்திய அரசு புதிய தொடக்கம்….!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசிகளால் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் உரு மாறிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது பரவுவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பணிகளை நிர்வகிக்க கோவின் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது போன்று தற்போது சர்வதேச தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க “யு-வின்”என்ற இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பதிவு, தடுப்பூசி போடுவதற்கு நினைவூட்டல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் தடுப்பூசி போட்ட பிறகு பயனாளிகளுக்கான சான்றிதழும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Leave a Reply