தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் சரத்குமார்…. மக்களுக்கு வேண்டுகோள்…..!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா வைரஸை எதிர்க்கும் உயிர் பாதுகாப்பு கவசமாக தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *