தஞ்சையில் பரபரப்பு ! நீண்டநாள் தகராறில் மகனை தந்தை கம்பியால் அடித்து கொலை

அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட் டதின்  அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூர் தெருவில் வாழ்ந்து  வருபவர் ராமசாமி. 65 வயதான  இவரது மகன் பெயர் மூர்த்தி. இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.மூர்த்தி  மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். தந்தை ராமசாமிக்கும், அவரது மகநான  மூர்த்திக்கும் நடுவே  நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. மூர்த்தி, நேற்று முன்தினம் இரவு கரையூர் தெருவில் அமைந்துள்ள  மாரியம்மன் கோயில் எதிரே  உள்ள கலையரங்கு  மேடையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு  சென்ற ராமசாமி தூங்கிக்கொண்டிருந்த  அவரது மகன் மூர்த்தியின் தலையில் இரும்பு கம்பியினால் அடித்துள்ளார். இதனால்  பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால்  உயிருக்கு ஆபத்தான சநிலையில்  இருந் மூர்த்தியை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்துள்ளார்.  இதுகுறித்து அதிராம்பட்டியை சேர்ந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *