தசரா சப்பர பவனியில் இதை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருடம் தோறும் நடைபெறும். இந்த திருவிழாவானது 11 நாட்கள் நடக்கும். இந்த விழாவில் ஒவ்வொரு வருடமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழா தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் தசரா திருவிழாவின் போது சப்பர பவனியில் உலோக கம்பிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகளுக்காக உபயோகப்படுத்தும் ஜெனரேட்டரில் மின்கசிவு தடுப்புக்கருவி பயன்படுத்த வேண்டும். மின்கசிவு விபத்துகளை தவிர்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது