தங்க பத்திரம்… “முதலீடு செய்வதனால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன”…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!!!!!

இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் அடுத்த தங்க பத்திரம் விற்பனைக்கு வரும்.

அதனால் தங்க பத்திரம் வாங்க விரும்புபவர்கள் இப்போதே வாங்கி விடுவது நல்லது. ரிசர்வ் வங்கி இந்த முறை தங்க பத்திரத்திற்கு கிராமுக்கு 5,499 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக டிஜிட்டல் முறையில் தங்க பத்திரம் வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் வழங்குகிறது. அதனால் டிஜிட்டல் முறையில் தங்க பத்திரம் வாங்கினால் கிராம் ரூ.5,359  என்ற விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும் ஒரு நபர் குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்க பத்திரமும் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்க பத்திரமும் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த தங்க பத்திரம் வாங்குவதன் மூலமாக தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பும் உயர்கிறது. அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி வருமானமும் கிடைக்கும்.

தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதன் பயன் என்ன.?

*தங்க பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி கிடையாது.

*மூலதன ஆதாய வரி கிடையாது.

*ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி உறுதியாக கிடைக்கும்.

*நிஜ தங்கத்தை சேமித்து  வைப்பதில்  சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் தங்க பத்திரங்களில் அது போன்ற சிக்கல்கள் இல்லை.

*தங்க பத்திரங்களை பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும்.

*ஆன்லைனில் வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி.

*மெச்சூரிட்டியின் போது தங்கத்தின் மார்க்கெட் விலையில் பணம் கிடைக்கும்.

இந்த தங்க பத்திரத்தை வாங்குவது எப்படி.?

*தங்க பத்திரத்தை வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பங்குச்சந்தை வாயிலாக வாங்கிக் கொள்ளலாம்.